பயங்கரவாதத்தை கொள்கையாக வைத்திருக்கும் நாடுகளை தனிமைப்படுத்துங்கள் – ராஜ்நாத் சிங்!
இந்திய ராணுவமும் உஸ்பெகிஸ்தான் ராணுவமும் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சி இன்று முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சி தொடக்க விழாவில் பேசிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘ இரு நாடுகளிடையேயே இந்த கூட்டுறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், பயங்கரவாதம் என்பது தற்போது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதனை தடுக்க அப்படிப்பட்ட பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து சர்வதேச நாடுகள் முடிவெடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.