“வேளாண் சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பாருங்கள்” மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் புதிது புதிதாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்தநிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்த வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர், புதிய வேளாண் சட்டங்கள் விவசாய சமூகத்திற்கு பயனளிக்கவில்லை என்றால், மத்திய அரசு அதில் திருத்தங்களையும் செய்யும் என கூறிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தனது சொந்த மக்கள் என்று பேசிய அவர், போராட்டம் நடத்தும் விவசாயிகள், விவசாய குடும்பங்களில் பிறந்தவர்கள். அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.