எல்லையில் தொடர்ந்து பிரச்சனை ! சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பா ?

Default Image

எல்லைப் பிரச்னையால் ரஷ்யாவில் சீன பாதுகாப்பு அமைச்சரை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில்  பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது.இதனிடையே கடந்த 31-ஆம் தேதி  இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களாக பான்காங் சோ ஏரியின் தெற்குக் கரை பகுதியில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது  என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையில்,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் இன்று  3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறைஅமைச்சர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வருகின்ற 10-ஆம் தேதி நடைபெறவுள்ள ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது  இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சரும் பங்கேற்கவுள்ள நிலையில் அவருடன் எந்த தனிப்பட்ட சந்திப்பும் திட்டமிடப்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்