ராஜ்நாத் சிங் – சீனப் பிரதிநிதி சந்திப்பு..? பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்.!
லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும், சீனாவும் சந்தித்து பேசவில்லை, எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இருதரப்பு கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த வாரம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன பிரதிநிதி வாங்யியுடன் லடாக் தாக்குதல் தொடர்பாக தொலைபேசி மூலம் பேசினார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்று உள்ளார். மாஸ்கோவில் இன்று நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், சீனப் பிரதிநிதியை சந்தித்து பேசுவார் என சீன குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இதுகுறித்து குளோபல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், சீன பாதுகாப்பு மந்திரி வீ ஃபெங் இன்று ரஷ்யாவின் வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளார். அப்போது, தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் ஒரு சந்தித்து பேசுவார் என குளோபல் டைம்ஸ் கூறியது.
இதற்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இருவருக்கும் இடையில் எந்த வித சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.