அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்த ராஜ்நாத் சிங் , பிளாரன்ஸ் பார்லி.!

இன்று அம்பாலா விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பிளாரன்ஸ் பார்லி இந்தியா வந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி ஆகியோர் இந்திய விமானப்படை நிலையமான அம்பாலாவுக்கு வந்துள்ளனர்.