சுதந்திர தினவிழாவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, பல திட்டங்கள் குறித்தும், கொரோனா காலத்தில் அமல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பேசினார். அப்போது, தேசிய மாணவர் படையை (NCC) விரிவாக்குவது குறித்து பேசினார்.
அதில், கடலோரம், எல்லைப் பகுதியை ஒட்டி 173 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டங்கள் நமது கடல் எல்லையிலும், சில மாவட்டங்கள் எல்லையை கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
எல்லை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் தேசிய மாணவர் படைக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக மோடி தெரிவித்தார். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் என கூறினார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த அடுத்த மறுநாளே (அதாவது நேற்று) இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள 1000 பள்ளிகள், கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு இருந்து 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட உள்ள 83 என்சிசி பிரிவுகளில், 53 ராணுவம், 20 கடற்படை, 10 விமானப் படை பிரிவுகளாக மேம்படுத்தப்பட உள்ளன.
NCC-யை விரிவுபடுத்தும் இந்த திட்டத்திற்கு மாநில அரசுக உதவியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…