லடாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருநாடுகளும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்குவது என சீன முடிவு செய்துள்ளது.
அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி முதல் படை விலக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதில், சீனா கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் தங்களது படைகளை நீக்கிவிட்டது. ஆனால், பங்கோங்சோ, தேப்சாங் உள்ளிட்ட சில பகுதிகளில் சீன படைகள் திரும்பபெறவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் வரை நிலவிய சூழலை எல்லை முழுவதும் திரும்ப கொண்டு வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 20-ம் தேதி இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், லடாக் எல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை செய்தார். டெல்லியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…