சீனாவிற்கு தகவல்களை அனுப்பிய ராஜீவ் சர்மாவிற்கு ஜாமீன்..!
கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் இந்தியாவின் எல்லை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் சில முக்கிய முடிவுகள் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் தகவல் அளித்து வருவதாக கூறி கைது செய்தனர்.
2016 முதல் 2018 வரை சீன புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊடகவியலாளர் ராஜீவ் சர்மா முக்கியமான தகவல்களை அனுப்பி வந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்தனர். எல்லையில் இராணுவத்தின் நிலைப்பாடுகள் குறித்தும், இந்தியாவின் எல்லை வியூகம் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் சர்மா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற அடிப்படையில் ராஜீவ் சர்மா சட்டரீதியான ஜாமீன் கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
61 வயதான சர்மா செப்டம்பர் 14 ஆம் தேதி தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.