அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ராஜீவ் கவுபா ஆலோசனை..!
கொரோனா பரவல் தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா ஆலோசனை.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி வருகிறது.
இன்று மட்டும் 2.73 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை பற்றி அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன், காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவர்களுடன் இன்று மாலை 4:30 மணிக்கு ஆலோசனை நடத்துவதாகவும், பின்னர் மருந்து நிறுவனங்களுடனும் மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.