#அறக்கட்டளை#க்கு சட்டவிரோத?? நன்கொடையா?? விசாரிக்க குழு?

Default Image

புராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விவகாரம் தொடர்பாக சட்ட விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க  அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது.

அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அமலாக்கத் துறையின் இயக்குனரே, இக்குழுவின் தலைவராகவும்  நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய – சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த வந்த வண்ணம் இருந்த நிலையில் சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை? என்று பிரதமர் கூறி வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , எம்.பி., ராகுல் காந்தியும் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த விவாகரம் தொடர்பாக காங்.,க்கு , பா.ஜ., தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகிய இருவரும் ஒன்றை குறிப்பிட்டு கூறியதாவது: நேரு மற்றும் இந்திரா குடும்பத்துக்கு சொந்தமான ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு, 2004 – 09 ஆண்டுகளில் சீன துாதரகத்திலிருந்து நன்கொடையானது  பெறப்பட்டுள்ளது.

சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள  இந்த நன்கொடை லஞ்சமாக பெறப்பட்டதா?? இது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். என்று அவர்கள் கூறினர்.

மேலும் இவ்விவகாரத்தில், பா.ஜக  மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி குற்றாட்டு குண்டுகளை பொழிந்து வந்த நிலையில்  மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக சாட்டையை சுழற்றி உள்ளது.

எதற்கு வீண்விவாதம் என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இது குறித்து நேற்று கூறியதாவது:

நேரு – இந்திரா குடும்பத்துக்கு சொந்தமான ராஜிவ் காந்தி அறக்கட்டளை, ராஜிவ் காந்தி, ‘சாரிடபிள் டிரஸ்ட்’ மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை, வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடை தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளது.

நன்கொடை பெற்றதில்  சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம், வருமான வரிச் சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் ஆகிய சட்டங்களின் ஏதாவது விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்பதை விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இது தொடர்பான  விசாரணை ஒருங்கிணைக்க, மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு, மத்திய அமலாக்கப் பிரிவின் இயக்குனர், தலைவராக இருப்பார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

‘மேலும் புகைச்சலை கிளம்பிய இவ்விவகாரத்தில் விசாரணையின் முடிவில், பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கும் வேளையில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

1991ல் ராஜிவ் காந்தி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜிவின் கனவான, நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை செயல்படும் என்று, அறிவிக்கப்பட்டது.

இதன் தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா, உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி., ராகுல், அவரது சகோதரி பிரியங்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர், இதன் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

ராஜிவ் காந்தி அறக்கட்டளை பெற்ற நன்கொடை தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழு அமைக்கப்பட்டது குறித்து, காங்கிரசை சேர்ந்த ஜெய்வீர் செர்ஜில் கூறியதாவது: இந்திய – சீன எல்லை பிரச்னையில், மத்திய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டிய காரணத்தால் அறக்கட்டளை விவகாரத்தை கையில் எடுத்து, மிரட்டிப் பார்க்க நினைக்கின்றனர்.

எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கை பின்பற்றுவதற்கு பதிலாக காங்கிரசுடன் மோதுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம், காங்கிரஸ் ஒரு போதும் பயப்படாது. மத்திய அரசின் தவறுகளை, மக்கள் மத்தியில் தொடர்ந்து நாங்கள் அம்பலப்படுத்துவோம்.

மேலும் மத்திய அரசின் மோசமான வெளிநாட்டு கொள்கையால் 20 வீரர்களை நாம் அநியாயமாக இழந்துள்ளோம். இந்த விஷயத்தில், காங்கிரஸ் மீது பாய்வதை விடுத்து  நாட்டின் நலன் கருதி, மத்திய அரசு செயல்பட வேண்டும். என்று கூறினார்.

மேலும் சர்ச்சையான அறக்கட்டளை நன்கொடை விவகாரம் குறித்து, பா.ஜ., பொதுச் செயலர் முரளிதர ராவ் கூறுகையில்  ராஜிவ் அறக்கட்டளை தொடர்பான விசாரணை, அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுவதாக கூறுவது தவறு. நாங்கள், 2014ம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்து விட்டோம். அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று நினைத்து இருந்தால் ஆட்சிக்கு வந்ததுமே விசாரணைக்கு  முதலில் உத்தரவிட்டிருக்க வேண்டுமே… நாங்கள் அப்படி செய்யவில்லை.

வெளிநாட்டு நன்கொடைகள் தொடர்பான விஷயத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே, இது இயற்கையான விசாரணை.இதில் அரசியல் உள்நோக்கம் கற்பிக்க கூடாது. சமீபகாலமாக, நன்கொடை  விவகாரத்தில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருந்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில் இந்த உலகில், எல்லாவற்றுக்குமே ஒரு விலை உள்ளது என, பிரதமர் மோடி நினைக்கிறார். எல்லாரையும் மிரட்ட நினைக்கிறார். ஆனால், உண்மைக்காக போராடுவோருக்கு எந்த விலையும் நிர்ணயிக்க முடியாது. அவர்களையும் மிரட்டவும் முடியாது என்று  பிரதமருக்கு புரியவில்லை போருலிக்கிறது என்று கூறியுனார்.இவ்வாறு தெரிவித்து கொண்டிருக்க அமைக்கப்பட்ட குழு தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக தகவல் வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்