ராஜீவ் காந்தி நினைவு தினம் – காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி.!

Remembering RajivGandhi

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார்.

1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அவர், குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து 14 அப்பாவி உயிர்களும் பலியானது. 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி, அவரது தாயைப் போலவே படுகொலை செய்யப்பட்டார்.

இன்று அவரது 33-வது நினைவு தினம் என்பதால், டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
adhik ravichandran
dhoni Riyan Parag
Myanmar Earthquake
pm modi MK stalin
CSKvsRR