ராஜீவ் காந்தி பிறந்த நாள் – நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை!
ராஜீவ் காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார்.
1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரது 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய இவர், 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளின் போது ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்றும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்துக்கு சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.