ரஜினி விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் – சந்திரபாபு நாயுடு
ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது.
இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர் உட்பட பலரும் கேட்டறிந்த நிலையில், ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனையில் இருந்து வந்த செய்தியைக் கேட்ட பிறகு, அவர் விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
Deeply concerned about superstar @rajinikanth after hearing the news of him being admitted to a hospital today. Wishing him a speedy recovery and good health!
— N Chandrababu Naidu #StayHomeSaveLives (@ncbn) December 25, 2020