முதலை மீது ஏற்றப்பட்ட ரயிலால் 25 நிமிடம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து..!

Default Image

குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

செவ்வாய் கிழமை காலை எட்டு  மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் காத்திருந்துள்ளது. பல்வேறு முயற்சி செய்து முதலையை மீட்க முயன்ற போதிலும், முதலை தலையில் அடிபட்டதால், அது இறந்துவிட்டது. வனவிலங்கு ஆர்வலர் ஹேமந்த் வத்வானா தெரிவித்துள்ளதாவது, அதிகாலை 3:15 மணியளவில் கர்ஜன் ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளரிடம் இருந்து ஒரு முதலை கிடப்பதாக எனக்கு தகவல் வந்தது.

ஆனால், அந்த இடம் நடுவில் அமைந்திருப்பதால் விரைவாக அங்கு செல்வது கடினமான விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், எங்களது வாகனம் கர்ஜன் ரயில் நிலையத்தை அடைந்த பிறகு, ரயில்வே அதிகாரிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இறந்த முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்