பேருந்து மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து கூறியுள்ள பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், காலை 9:55 மணியளவில் பலோத்ராவிலிருந்து இருந்து பேருந்து புறப்பட்டதாகவும், சாலையின் தவறான பக்கத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், டேங்கர் லாரி மோதிய பின் உடனடியாக பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்தின் போது பேருந்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாகவும், 12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…