உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்ற ராஜஸ்தான் சபாநாயகர்.!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை ராஜஸ்தான் சபாநாயகர் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, நோட்டீஸை ரத்து செய்ய கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
பின்னர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்தது.
இதையடுத்து, சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு ஜூலை 24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைக்கு சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் நகர்வுகளை பொறுத்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஜூலை 21-ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ராஜஸ்தான் சபாநாயகர் அறிவித்தார். இதனால், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025