ராஜஸ்தான் அரசியல்.. சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.?
ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்த நிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார் என கூறப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜ்பவனில் முதல்வர் அசோக் கெலட் இன்று சந்தித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை திருப்பி ஆளுநர் கொடுக்க உள்ளதாகவும், தற்போது வரை சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.