மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்.
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ராஜ்பவன் தெரிவித்து. சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து ராஜேந்திர சிங் குதா மாநில அரசை விமர்சித்திருந்தார்.
அதாவது, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜேந்திர சிங் குதா, பெண்கள் பாதுகாப்பில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பது உண்மை, இதனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மணிப்பூருக்கு பதிலாக, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதை நாம் நமக்குள் பார்க்க வேண்டும் என்றுள்ளார்.
எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநில அரசை விமர்சித்த ராஜேந்திர சிங் குதா பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, குதா சைனிக் கல்யாண், ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.