ராஜஸ்தான் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார் .
ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் . சுரு மாவட்டத்தின் சுஜன்கர் சட்டமன்ற தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்திய முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மேக்வாலுக்கு இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது .
அதனையடுத்து குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பன்வர் லால் . கடந்த ஐந்து முறை எம்எல்ஏ-ஆக இருந்த மேக்வால் திங்களன்று குர்கானில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . 72 வயதான மேக்வாலின் மரணத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,
எங்கள் மூத்த அமைச்சரான பன்வர் லால் மேக்வால் உடல்நலக் குறைவால் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்து தற்போது காலமானதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். 1980 முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கடவுள் அவர்களுக்கு துயரத்தை தாங்குவதற்கான மன தைரியத்தை அளிக்கட்டும் என்று கூறினார் . சமீபத்தில் பன்வர் லால் மேக்வாலின் மகள் பனராசி தேவி இருதய கோளாறு காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…