செய்தியாளர்கள் சந்திப்பில் தூங்கி வழிந்த ராஜாஸ்தான் மாநில முதல்வரின் ஆலோசகர்.! வைரலாகும் வீடியோ…
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட சாதனைகளை விளக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகரும், சுயேச்சை எம்எல்ஏவுமான சன்யம் லோதா, அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தூங்கியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
राजस्थान को मॉडल स्टेट बनाने के बाद थक कर सोते हुए मुख्यमंत्री के विशेष सलाहकार, विधायक, संयम लोढ़ा जी।#ModelStateRajasthan pic.twitter.com/JpbbxtsCUo
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 26, 2022