துணை முதலமைச்சர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்க ராஜஸ்தான் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
ராஜஸ்தானில் காங்கிராஸ் அரசை தக்க வைக்க முதலமைச்சர் அசோக் கெலாட் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது .ஆனால் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
இதனால் இந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மேலும் அவரை துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும் அவருடன் இருக்கும் விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
எனவே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra )-வை நேரில் சந்தித்து சச்சின் பைலட் ,விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா நீக்கம் குறித்து தெரிவித்தார் .இதற்கு ஆளுநரும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…