கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். அதே சமபயத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு அரசும், பல தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகிறார்கள். இதில் பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களும் உதவி செய்யும் எண்ணம் தோன்றலாம் என்ற நோக்கத்தோடு சிலர் புகைப்படம் எடுப்பார்கள்.
ஆனால் தற்போது பலர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்து கொள்வதற்காகவே உதவி செய்வதை புகைப்படம் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது சேவையாக இருக்க வேண்டுமே தவிர விளம்பரமாக இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆதரவற்றவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதே சமயத்தில் சரியான சமூக இடைவெளியுடன் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…