சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.25-ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறும் என தேர்தல் தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 5.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 மாநில தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
5 மாநிலங்களுக்கு வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பிரதான அரசியல் கட்சிகள் களத்தில் குதித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 33 வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் மட்டுமே தாமதமானது.
தற்போது ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 33 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெளியாகியுள்ளது. இதில், முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும், சிபி ஜோஷி நாத்வாராவிலும், திவ்யா மதேர்னா ஓசியனிலும், கோவிந்த் சிங் தோடசரா லாச்மங்கரிலும், கிருஷ்ண பூனியா சதுல்பூரிலும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 83 பேர் கொண்ட 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜகவும் வெளியிட்டுள்ளது. இதில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜலர்படான் தொகுதியிலும், சதீஷ் புனியா ஆம்பர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான 41 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக அக்டோபர் 9ம் தேதி வெளியிட்டது.
அதில், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ராஜ்யவர்தன் ரத்தோர் ஜோத்வாராவில் போட்டியிடுவார்கள், தியா குமாரி எம்பி வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாபா பாலக்நாத் திஜாரா தொகுதியிலும், கிரோடி லால் மீனா சவாய் மாதோபூர் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …