ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.
ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு கூறுகிறது. எனவே, ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், ராஜஸ்தான் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க வாக்குகளை சேகரித்து வருகிறது. காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், முதல்வர் அசோக் கெலாட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்து வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பாஜக களத்தில் நிற்கிறது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ்.
40 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்.! அப்பாவு கொடுத்த ஷாக்.! நிதானித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தொட்டசரா மற்றும் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், ராஜஸ்தான் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்தபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.
காங்கிரஸ் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். உள்ளாட்சி மன்ற அளவில் பணி நியமனத்துக்கு புதிய முறை கொண்டு வரப்படும். ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் 1.05 குடும்பங்களுக்கு ரூ.500க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும். ராஜஸ்தானில் மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் பல்வேறு சுவராஸ்யமான வாக்குறுதிகளை அளி வீசியுள்ளது.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…