ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

Congress election manifesto

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் தற்போது முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இதனால், இம்முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.

ஆனால், இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது கிடையாது என்று வரலாறு கூறுகிறது. எனவே, ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், ராஜஸ்தான்  வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதனால், ராஜஸ்தானில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க வாக்குகளை சேகரித்து வருகிறது. காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், முதல்வர் அசோக் கெலாட்டை முன்னிறுத்தி காங்கிரஸ் பிரசாரம் செய்து வரும் நிலையில், முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பாஜக களத்தில் நிற்கிறது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்குறுதிகளை வெளியிட்டது காங்கிரஸ்.

40 அதிமுக எம்எல்ஏக்கள் தயார்.! அப்பாவு கொடுத்த ஷாக்.! நிதானித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தொட்டசரா மற்றும் கட்சியின் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், ராஜஸ்தான் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்தபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். உள்ளாட்சி மன்ற அளவில் பணி நியமனத்துக்கு புதிய முறை கொண்டு வரப்படும். ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் 1.05  குடும்பங்களுக்கு ரூ.500க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும். ராஜஸ்தானில் மாட்டுச்சாணம் கிலோ ரூ.2 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும், குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 வழங்கப்படும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ரூ.15 லட்சம் காப்பீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் பல்வேறு சுவராஸ்யமான வாக்குறுதிகளை அளி வீசியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்