செய்தியாளர்கள் சந்திப்பில் சச்சின் பைலட் பற்றிய கேள்வியை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தவிர்த்துவிட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் இரு பிரிவுகளாக இருந்து மறைமுக பனிப்போர் நடந்து வருகிறது என்றே கூறலாம். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக (ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி) காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.
சச்சின் பைலட் போராட்டம் :
பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழலை விசாரிப்போம் அதனை வெளிக்கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என கூறி, இது காங்கிரஸ் ஆட்சியை பற்றி மக்கள் தவறாக நினைக்க கூடும் என கூறி சச்சின் போராட்டம் நடத்தினர். மேலும், ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும் எனவும் சச்சின் பைலட் கூறியிருந்தார்.
முதல்வர் மறுப்பு :
இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய முதல்வர், நாங்கள் பணவீக்கம் பற்றி மட்டுமே பேச வந்துள்ளோம் என கூறினார்.
பணவீக்கம் :
‘மேலும் அவர் கூறுகையில், பண வீக்கம் மட்டுமே எங்கள் காவலை. அதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதில் இருந்து நாங்கள் விலக போவதில்லை. என அவர் குறிப்பிட்டு பேசினார். அடுத்து, ‘மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படுவதில்லை என சச்சின் பைலட் போராட்டம் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.
பாஜக எதிரி அல்ல :
அடுத்து பாஜக பற்றி பேசிய காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், ‘பாஜகவுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை, ஆனால்,எங்களுக்கு இடையில் ஒரு கருத்தியல் போர் இருக்கிறது என குறிப்பிட்டு பேசினார்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…