காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.? சச்சின் பைலட் குறித்த கேள்வியை தவிர்த்த ராஜஸ்தான் முதல்வர்.!

Default Image

செய்தியாளர்கள் சந்திப்பில் சச்சின் பைலட் பற்றிய கேள்வியை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தவிர்த்துவிட்டார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் இரு பிரிவுகளாக இருந்து மறைமுக பனிப்போர் நடந்து வருகிறது என்றே கூறலாம். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக (ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி) காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.

சச்சின் பைலட் போராட்டம் :

பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழலை விசாரிப்போம்  அதனை வெளிக்கொண்டு வருவோம் என காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என கூறி, இது காங்கிரஸ் ஆட்சியை பற்றி மக்கள் தவறாக நினைக்க கூடும் என கூறி சச்சின் போராட்டம் நடத்தினர். மேலும், ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் தொடரும் எனவும் சச்சின் பைலட் கூறியிருந்தார்.

முதல்வர் மறுப்பு :

இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட்  உண்ணாவிரத போராட்டம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய முதல்வர், நாங்கள் பணவீக்கம் பற்றி மட்டுமே பேச வந்துள்ளோம் என கூறினார்.

பணவீக்கம் :

 

‘மேலும் அவர் கூறுகையில், பண வீக்கம் மட்டுமே எங்கள் காவலை. அதில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதில் இருந்து நாங்கள் விலக போவதில்லை. என அவர் குறிப்பிட்டு பேசினார்.  அடுத்து, ‘மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படுவதில்லை என சச்சின் பைலட் போராட்டம் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.

பாஜக எதிரி அல்ல :

அடுத்து பாஜக பற்றி பேசிய காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், ‘பாஜகவுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை,  ஆனால்,எங்களுக்கு இடையில் ஒரு கருத்தியல் போர் இருக்கிறது என குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்