டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் கைது..!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வரை கைது செய்த போலீசார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி, ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், சோனியா காந்தி கொரோனா தொற்று காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகியுள்ளார். இந்த நிலையில், சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதர்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.