தங்கம் வென்ற அவனிக்கு ரூ.3 கோடி பரிசு – ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்தார். பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. இவருக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதுவரை இந்தியா 7 பதக்கங்களை வென்று பாராலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பலரும் பாராட்டியும், பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் முதல்வர் பரிசு அறிவித்துள்ளார்.
அவனி லெஹாரா, தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் ஆகிய மூன்று வீரர்களும் ஏற்கனவே மாநில அரசின் வனத்துறையில் ஏசிஎஃப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில வீரர்கள் பதக்கங்களை வெல்வதன் மூலம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
#TokyoParalympics में प्रदेश की अवनि लेखरा को स्वर्ण जीतने पर 3 करोड़, देवेंद्र झाझड़िया को रजत जीतने पर 2 करोड़ तथा सुन्दर सिंह गुर्जर को कांस्य पदक जीतने पर 1 करोड़ रूपये की राशि इनाम स्वरुप प्रदान की जाएगी।
— Ashok Gehlot (@ashokgehlot51) August 30, 2021