ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ ! காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார்

Published by
Venu

ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.

 பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும்  நீக்கப்பட்டனர்.

இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார்.  சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சச்சின் பைலட் மற்றும்  அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  மீது நடவடிக்கை எடுக்கத்தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.மேலும் வருகின்ற  செவ்வாய் கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.இதற்கு மத்தியில் தான்  சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது.அந்த ஆடியோவில் ,மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மா இருவரும், அசோக்  அரசை கவிழ்ப்பது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை  இடம் பெற்றிருந்தது.இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியது.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அரசை கவிழ்க்கும் சதி செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக ராஜஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜ்  காவல் நிலையத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி மீது அளித்துள்ளார்.பாஜகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார் பரத்வாஜ்  .

Published by
Venu

Recent Posts

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…

25 minutes ago

திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…

29 minutes ago

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…

59 minutes ago

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

1 hour ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

2 hours ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

2 hours ago