ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவு …!
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.
ராஜஸ்தானில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கிடையே 130 தொகுதிகளில் நேரடியாக பலப்பரிட்சை நடத்த உள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது .பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர் காலமானதால் 200 தொகுதிகளில் 199 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக-காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ள நிலையில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகியுள்ளது.