ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.இது தொடர்பாக நகாவுர்,பாலாஜி காவல் நிலையம் போலீசார் கூறுகையில்,இந்த விபத்தில் எட்டு பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேர் பலத்த காயமடைந்து பிகானீரின் நோகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்து,மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நகாவூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்தார்.மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும், என்றார்.
இதனையடுத்து,ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது செய்திக்குறிப்பில் கூறியதாவது:
“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த கொடூரமான சாலை விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிர் இழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:
“ராஜஸ்தானின் நாகூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி(பிஎம்என்ஆர்எஃப்)யிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும்,காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்”,என்று தெரிவித்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…