ராஜஸ்தான் : 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற கொடூரம்.!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள நிரிசிங்புரா கிராமத்தில் 14 வயது சிறுமி நேற்று காலை தங்கள் வீட்டு கால்நடைகளை அருகில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதிய வேளையில் கால்நடைகள் வீட்டுக்கு வந்துவிட்டன.ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் சிறுமி வீட்டை சேர்ந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். இறுதியில் அருகில் உள்ள நிலக்கரி உலை பகுதி அருகே எதோ எரிவது போல தெரிந்துள்ளது. அங்கே மனித உடல் எலும்பு இருந்துள்ளது. மேலும் சிறுமியின் வளையல், செருப்பு ஆகியவை அங்கு இருந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமி வீட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்தனர். அப்போது விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் நிலக்கரி சுரங்கத்தில் எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து, சிறுமி குடும்பத்தார் கூறியதன் பெயரில் 3 பேரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.