நாட்டில் 5 மாநில சட்டப்பேரவையில் பாஜக எந்த மாநிலத்திலும் வெற்றி பெறாது என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்த நிலையில், தெலுங்கனாவில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 5 மாநிலங்களிலும் பாஜக காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 5 மாநில தேர்தலின் முடிவு அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், பிரதான கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு, முடிகளுக்கு காத்திருக்கின்றனர்.
5 மாநில தேர்தல் முடிவுகள் டிச.3ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இந்த 5 மாநில தேர்தலில் பாஜக எங்கையும் வெற்றி பெறப் போவதில்லை என்று கணித்துள்ளார். கருத்துக்கணிப்பு முடிவுகள் எப்படி இருந்தாலும் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ன சொன்னாலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
மீண்டும் படுமோசமடையும் காற்றின் தரம்… மழையை எதிர்பார்க்கும் டெல்லி மக்கள்.!
5 மாநிலங்களில் பாஜக வெற்றிபெறவில்லை. ராஜஸ்தானில் மக்கள் எங்கள் ஆட்சியை விரும்புவதால் மீண்டும் எங்களை தேர்வு செய்வார்கள். எங்கள் அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பு அலையும் இல்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் எதையும் விட்டு வைக்கவில்லை என்று பாஜக வாக்காளர்களும் கூறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய சொற்கள் யாருக்கும் பிடிக்கவில்லை.
இதனால், காங்கிரஸ் தனது சமூக உத்தரவாதத்தின் காரணமாக 5 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் என கூறினார். தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் மட்டுமே பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. 2018ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வராக பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…