ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் ஒரே நாளில் பெற்றதாக பெண் புகார் ! உண்மையில் நடந்தது என்ன…மருத்துவர் விளக்கம்..
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கையாக மக்களை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்திவருகின்றனர்.
மேலும் தடுப்பூசியின் மீதுள்ள தவறான புரிதல் தற்போது விளக்கப்பட்டு அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவது மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மக்கள் ஆன்லைனில் தங்களுக்கான தடுப்பூசிகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து ராஜஸ்தானின் டௌசாவில் 43 வயதான பெண் ஒருவர் ஒரே நாளில் கொரோனாக்கான 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது,அதாவது கைர்வால் கிராமத்தில் வசிப்பவர்கள், கிரண் மற்றும் அவரது கணவர் ராம் சரண் சர்மா ஆகியோர், அவர்கள் அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு (பி.எச்.சி)வெள்ளிக்கிழமை சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்பிறகு, அந்த பெண்ணுக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலிகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.இதற்கு காரணம் பின்னர் இரண்டு டோஸ்களையும் ஒரே நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என சர்மா(பெண்ணின் கணவர்) செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இருப்பினும் தடுப்பூசி மையம் இதனை மறுத்து, விதிகளின்படி இது சாத்தியமில்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் ஒரு மருத்துவரை சந்தித்ததாகவும், அவர் பாராசிட்டாமல் மாத்திரையை தன் மனைவிக்கு கொடுத்து ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரை டௌசாவின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி (சி.எம்.எச்.ஓ) டாக்டர் மனிஷ் சோத்தாரி முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை அவர் விளக்கியுள்ளார்.
அதாவது அந்த பெண்ணுக்கு முதல் தடுப்பூசி போடுவதற்கான முயற்சியின்போது ஊசிமுனையினால் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்பட்டது எனவும், மேலும் செவிலியர்கள் அவரது கையில் மற்றொரு இடத்தைக் கண்டுபிடித்து முதல் டோஸ் தடுப்பூசியை போட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கிரண் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டதாக கருதினாள், அது உண்மையல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணிற்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…