ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான விவசாயிகள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே வெட்டுக்கிளி நிரம்பிய கூடையுடன் வந்துள்ளேன்,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த வேளாண் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சுமார் `3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…