காங்கிரஸ் தலைவர் பதவியில் நான் போட்டியிடவில்லை என அசோக் கெலாட் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுத்த பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சி விதிப்படி, ஒருவருக்கு ஒரு பதவிதான். ஆதலால் , காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை அசோக் கெலாட் ஏற்றுக்கொண்டால், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆதலால், அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க கட்சி தலைமை முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 92 பேர், ராஜினாமா செய்துவிடுவதாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி களையும் அபாயம் எழுந்துவிட்டது. நிலைமை அறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், ‘ தான் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுவதாகவும், இதனால் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளுக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்டதாகவும்’ அவர் தெரிவித்தார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…