நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மற்ற மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளதால் ராஜஸ்தான் மாநில எல்லைகளை மூடுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை, கொரோனாவால் 52,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1783 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பல்வேறு மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அமைச்சர்கள், சிறப்பு தலைமை செயலர்களுடன் கலந்தாலோசித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் சுற்றியுள்ள மாநிலங்களிலும் இந்த கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் ராஜஸ்தானுக்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது எனவே, ராஜஸ்தான் மாநில எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது தங்கள் மாநில மக்களின் உயிருக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், மத்திய அரசு விதித்துள்ள தளர்வுகளின் படி, அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே ராஜஸ்தான் எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அவரச காரணங்களுக்காக ( இறப்பு, மருத்துவம் ) அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று செல்லலாம் எனவும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 3317 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…