ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு 110ஐ தொட்டது.. தூக்கி வாரி போடும் திடுக்கிடும் தகவல்கள்..
- ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக புகார்கள் வந்தன.
- இதையடுத்து, மருத்துவமனையில் குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 குழந்தைகள் பிறந்த உடனே உயிரிழப்பதாக அந்த விசாரனை அமைப்பு அளித்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்த உயிரிழப்பிற்க்கு காரணம் மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லாததும், நோய் தொற்று பாதிப்புகள் உள்ளிட்டவைகளே உயிரிழப்புக்கான முக்கிய காரணம் முதல் கட்ட விசாரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்மையான காரணத்தை கண்டறிய ஜெய்ப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையின் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கோடா மருத்துவமனையில் விசாரணையை ஏற்கனவே தொடங்கியது.
மேலும் இதுகுறித்து விரிவாக விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் அப்போது தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும், ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்பு 110-ஆக உயர்ந்துள்ளது. கே.கே.லான் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். நிமோனியா, ரத்தத்தில் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளால் 110 குழந்தைகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 70 குழந்தைகள் உயிரிழப்பு மற்க்க முடியாத வடுவாக உள்ள நிலையில் அந்த பிஞ்சுகளின் நினைவு மறையாத நிலையில் மீண்டும் உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.