மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என கூறியிருந்தார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என காலக்கெடு கொடுத்திருந்தார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே ஒன்றாம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதன்கிழமை மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் எல்லாம் அகற்றப்படாத பட்சத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் பாடல் ரெட்டை ஒலியில் ஒலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து உலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுடன் ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மசூதிக்கு வெளியே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…