“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதை சுட்டிக்காட்டி, 'மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும' என்று ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, ‘மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்’ என்று எச்சரித்துள்ளார். மும்பையின் வரலாற்று சிறப்புமிக்க சிவாஜி பூங்காவில் நடந்த குடி பத்வா பேரணியில் உரையாற்றிய அவர்,”மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும்.
மும்பையில் வாழ்ந்து கொண்டே மராத்தி பேச முடியாது என்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தாய்மொழி உள்ளது. அதனை மதிக்க வேண்டும், இந்தி திணிப்பு வேண்டாம் என தமிழ்நாட்டு மக்கள் தைரியமாக எதிர்க்கின்றனர். இதனை முன்மாதிரியாகக் கொண்டு, மகாராஷ்டிராவிலும் மராத்தி மொழியைப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “மராத்தி மதிக்கப்பட வேண்டும், மகாராஷ்டிராவின் ஒவ்வொரு வங்கியிலும் மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறியுமாறு எம்என்எஸ் வீரர்களுக்கு ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் மொழி அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ள சூழலில், ராஜ் தாக்கரேவின் இந்தக் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் இந்தி மொழியை திணிக்க முயல்வதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் தங்களது சொந்த மொழிகளைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை முன்மாதிரியாகக் கொண்டு, மகாராஷ்டிராவிலும் மராத்தி மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கூறியிருக்கிறார்.
ராஜ் தாக்கரேவின் இந்த பேச்சு, மகாராஷ்டிராவில் மராத்தி மொழியின் மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சி என்றாலும், “கன்னத்தில் அறைய வேண்டும்” என்ற அவர் கூறிய கருத்துக்கள், விவாதத்தை தாண்டி வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.