35 ஆண்டிற்கும் மேலாக நடந்து ராஜ்மான்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் சுட்டுக்கொன்ற வழக்கில் 11 போலீசார் உள்பட 18 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1985 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.அப்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.மேலும் காங்.,தலைமையில் முதல்வரான சிவசரன் மாத்தூர் மீண்டும் ராஜஸ்தான் மாநில முதல்வராக தேர்தலில் நின்றார்.
இத்தேர்தலில் மாநிலத்தின் டீக் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜா மன் சிங் என்பவரும் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வருக்கான பிரசார வாகனத்தை ராஜா மன்சிங் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இருவரின் ஆதரவாளர்கள் இடையே தேர்தல் நேரத்தில் கடும் பகை உருவானது . இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் டீக் பகுதியில் உள்ள வேளாண் சந்தையில் மோதல் நடந்து உள்ளது. இந்தமோதலில் ராஜா மான்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை ராஜஸ்தான் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
அப்பொழுது ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 11 போலீசார் உள்ளிட்ட 18 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் வழக்கு நடந்து கொண்டிக்கும் போது 3 பேர் காலமாயினர்.
மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் மீதமிருந்த 11 போலீசார் மீதான வழக்கு சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கின் குற்றவாளிகளான 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ராஜா மன்சிங் 1952 ம் ஆண்டில் இருந்து 1984ம் ஆண்டு வரையில் தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…