கொரோனோ தொற்றின் காரணமாக ராஜ்பவனை பார்வையிட தடை…. முன்பதிவு செய்தவர்கள் வேறு ஒரு நாளில் பார்வையிடலாம் என அறிவிப்பு…
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மலபார் ஹில் என்ர பகுதியில் ராஜ் பவன் உள்ளது. இதன் அழகை கண்டு ரசிக்க தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்கனவே மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனோ வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாராஷ்ட்ரா ஆளுநர் மாளிகை தற்போது தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் ராஜ்பவனை பார்வையிட முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு வேறுநாளில் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.