“பஞ்சாப் மாநில முதல்வருக்கு நன்றி “- சுரேஷ் ரெய்னா
தனது மாமா கொலை வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும், பஞ்சாப் மாநில முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி, தாயகம் திரும்பினார் சென்னை அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தனது மாமா குடும்பத்தினரை தாக்கியதாகவும், அவரின் மாமா, அவரது மகன் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் காரணமாக இந்தியா திரும்பியதாக கூறினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பஞ்சாப் முதல்வருக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரித்து வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்தார்.
விசாரணையில் பொது, சுரேஷ் ரெய்னா மாமா வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்புள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் மாவட்டத்தில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சென்றார். அப்பொழுது பேட்டியளித்த அவர், இந்த வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும், பஞ்சாப் மாநில முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.