“இமாச்சல பிரதேசத்தை மிரட்டிய மழை” இதுவரை 61 பேர் பலி ..!!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர் மழையால், பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்ற மாணவர்கள் உள்பட 61 பேர், மணாலியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை, வரும் 29-ம் தேதி நிறைவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்டம், காட்டூரிலிருந்து சுற்றுலா சென்ற 31 மாணவர்களும், 9 ஆசிரியர்களும், மணாலி பகுதியில் விடுதியிலேயே தவித்து வருகின்றனர்.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தாளாளர் வணங்காமுடி, முதல்வர் பத்மாவதி, ஆசிரியைகள் உள்ளிட்ட 21 பேர் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். மணாலி பகுதிக்கு கடந்த 21-ம் தேதி சென்றடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி முதல் பெய்துவரும் கனமழையால் அவர்கள் முடங்கியுள்ளனர். டெல்லியிலிருந்து 3 சமையலர்கள் மற்றும் ஒரு வழிகாட்டியையும் அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அங்கு சாலை வசதி இல்லாததால், அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில் அவர்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். சொந்த ஊருக்கு நாளை வருவதாக இருந்த அவர்கள், இரண்டு நாள் தாமதமாக வருவார்கள் என்று ஆசிரியை நாகலட்சுமியின் கணவர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை, ராஜஸ்தான் பகுதியில் வரும் 29-ம் தேதி நிறைவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி தொடங்கிய தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மழை குறையும் என்றும், அதனைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
DINASUVADU