மழை வெள்ள பாதிப்பு : முருங்கைக்காய் ஒரு கிலோ 350 ரூபாயா ….!
மழை வெள்ள பாதிப்பு காரணமாக மும்பையில் முருங்கைக்காய் ஒரு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம்.
பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலையும் அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக அண்மையில் தக்காளியின் விலை அதிகளவில் இருந்தது.
தற்பொழுதும் மும்பையில் முருங்கை, தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றில் சில்லரை விலை ரூபாய் 80 முதல் 350 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது முருங்கைக்காயின் தேவைகள் அதிகரித்து இருப்பதாலும், சந்தையில் அதிகம் கிடைக்காததாலும் கடந்த மாதம் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்பொழுது கிலோ 353 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.