கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு இல்லை – பியூஷ் கோயல் தகவல்

Default Image

கடந்த 22 மாதங்களில் ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.இதற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்  பதில் அளித்து பேசினார்.அவர் பேசுகையில், கடந்த 22 மாதங்களில், ரயில் விபத்துக்கள் காரணமாக பயணிகள் இறப்பு எதுவும் ஏற்படவில்லை.கடைசியாக ஏற்பட்ட இறப்பு  2019-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி அன்று நடந்தது.கடந்த ஆறு ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்புக்கு அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இந்தியாவில் 34,665 ரயில்வே பாலங்கள் உள்ளன, அவை 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. ஆனால் அமைச்சகம் ஒரு வலுவான ஆய்வு முறையைக் கொண்டுள்ளது.மேலும் அவர் பேசுகையில்,பாலங்களின் நிலையை கண்காணிக்க ட்ரோன்கள் சரியான அணுகுமுறையாக இருக்காது. இது சென்சார்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், இழுவிசை அழுத்தத்தை சரிபார்க்கிறது என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்