ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல – ராகுல் காந்தி

ரயில்வேயைப் பயன்படுத்தி பயணிக்கும் மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கேரள மாநிலத்தில் சென்றுள்ளார்.இந்த இரண்டு நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
அந்த வகையில் மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில் , ரயில்வே நம் நாட்டின் அடிப்படை பகுதியாகும். ரயில்வே ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல, அவை முழு நாட்டையும் சேர்ந்தவை. இது மில்லியன் கணக்கான மக்களை மலிவாக பயணிக்க அனுமதிக்கிறது.இந்த இந்திய சொத்தை தனியார்மயமாக்குவதில் அரசு நோக்கம் கொண்டுள்ளது என்பதை கடந்த பட்ஜெட்டில் கவனித்தேன்.
இது எங்கள் ரயில்வேயைப் பயன்படுத்தி பயணிக்கும் மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலாகும். இது ரயில்வேயில் பணிபுரியும் மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கும் ஒரு சிக்கலை உருவாக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025