ஆண்களே இல்லாத ரயில் நிலையம் !!!
பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிராங்கிபுரம் ரயில் நிலையம்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் ரயில் நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான்.
ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே பணிபுரியும் மூன்றாவது ரயில் நிலையமாக பிரங்கிபுரம் உள்ளது.
இதுகுறித்து குண்டூரின் ரயில்வே மேலாளர் பூமா கூறும்போது, “இந்திய ரயில் நிலையங்கள் பெண்களுக்கான அதிகாரமளிக்கும் இடமாக உள்ளன. பல்வேறு துறைகளில் செயல்படும் பெண்களின் திறனை நாங்கள் காட்டுகிறோம்” என்றார்.
இந்த ரயில் நிலையத்தின் சில பிளாட்பார்ம்களில் பெண்களுக்கான சானிடரி நாப்கின் பேட் பெறுவதற்கான வசதிகளை செய்து இந்தியாவின் முன்மாதிரி ரயில் நிலையங்களில் ஒன்றாக பிரங்கிபுரம் ரயில் நிலையம் விளங்குகிறது.