ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் வாபஸ்.!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான ரயில், விமானம், பேருந்து ஆகியவை தற்போது இயங்கவில்லை.
முன்னதாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்தான் பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனால் ரயில் பயணிகள் ஏப்ரல் 14 க்கு பிறகு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, பயணிகளிடம் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கு அவர்களது அக்கவுண்டில் முழுத்தொகையும் வந்துசேர்ந்துவிடும். அதேபோல கவுண்டரில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்தோர், 3 மாதங்களுக்குள் டிக்கெட் கவுண்டருக்கு வந்து டிக்கெட்டை கொடுத்து வழக்கமான பிடித்தம் ஏதுமின்றி முழுத்தொகையையும் வாங்கி கொள்ளலாம் எனவும்,
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் திறந்தவுடன் டிக்கெட்டை கொடுத்து முழு பணத்தையும் வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மே 3-க்கு பிறகான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவார்கள் தற்போது செய்ய வேண்டாம் எனவும், ஆன்லைன் கவுண்டர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்., அதனால், ஊரடங்கு முடிந்த பிறகு, டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் முன்பதிவு செய்து கொள்ளவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.